ரயில் முன் பாய்ந்து துடிதுடித்து பலியான விக்னேஷ்! பரபரப்பு கடிதம் சிக்கியது

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

சென்னையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் பரபரப்பு கடிதம் சிக்கியது.

சென்னை ஆவடியை அடுத்த வீராபுரம் வேணுகோபால் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்.

கால் டாக்ஷி டிரைவரான இவர், நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.

பணி முடிந்தபின்னர் மாலை பேஸ்புக் பக்கத்தில், ஐந்து வருடமாக பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவள் ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனை பார்த்த விக்னேஷின் அண்ணன் பதற்றம் அடைந்து, தாயாருடன் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

இதனையடுத்து விக்னேஷை பொலிசார் வலைவீசி தேடிவந்தனர், விக்னேஷின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருமுல்லைவாயல், அம்பத்தூர் ரயில் நிலையங்கள் இடையே தண்டவாளத்தில் வாலிபரின் உடல் கிடப்பதாக ஆவடி ரயில்வே பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்திய போது, விக்னேஷின் உடல் என தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் விக்னேஷின் கார் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கே அவர் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தில், நான் ஒரு பெண்ணை ஐந்து வருடமாக காதலித்தேன், அவரும் என்னை மிகவும் நேசித்தார்.

பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தோம், ஒருநாள் திடீரென என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

இதனால் நான் வேதனை அடைந்தேன், அந்த பெண் பற்றி குறை கூறினாலும் அனைவரும் அவருக்குத்தான் ஆதரவாக பேசுவார்கள்.

இதனால் இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. தற்கொலை செய்து கொள்கிறேன். ஆனால் என்னை ஏமாற்றிய அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கடிதத்தில் பொலிஸ் கமிஷனர் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அம்மா, அப்பாவை நன்றாக பார்த்துக் கொள், அவர்களுக்கு தேவையானதை செய்து கொடு, என்னை மன்னித்து விடுங்கள் எனவும் அண்ணனுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments