வைரலாகும் 1968ம் ஆண்டு ஏறுதழுவுதல் விழா அழைப்பு!

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

ஏறுதழுவுதல் விழா என்ற பெயரில் கடந்த 1968ம் ஆண்டு அச்சிடப்பட்ட அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையோடு நடத்தப்படும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.

இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஏறுதழுவுதல் விழா என்ற தலைப்பில் சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த 1968ம் ஆண்டு அச்சடித்த அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்கள் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments