அமேசான் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த சுஷ்மா சுவராஜ்

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலான பொருட்களை இணையதளத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று அமேசான் நிறுவனத்துக்கு இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இணையதள வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி நிறத்திலான மிதியடிகள் விற்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

advertisement

கனடா வாழ் இந்தியர்களின் தொடர் போராட்டத்தால் அந்த பொருட்களை அமேசான் நிறுவனம் இணையதளத்திலிருந்து நீக்கியது.

இந்தநிலையில், இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலான பொருட்களை இணையதளத்திலிருந்து உடனடியாக அமேசான் நீக்க வேண்டும். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பும் கோர வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு நீக்கவில்லை என்றால் அமேசான் நிறுவன அதிகாரிகளுக்கு இந்திய அரசு விசா வழங்காது என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களையும் மறுபரீசீலனை செய்யும் என்று சுஷ்மா சுவராஜ், ட்விட்டர் மூலம் எச்சரித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments