ஜெ.சொத்துக்கள் யாருக்கு? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமையாக்குவது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி காலமானார்.

இவருடைய சொத்துக்கள் யாருக்கு போய் சேரும் என்ற விவாதம் நடந்து வருகிறது.

ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும் என கே.கே.ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது, அப்போது, தனிநபர் சொத்து தொடர்பாக பொதுநல மனுவை தாக்கல் செய்ய முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments