உச்சநீதிமன்றத்தால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழர்கள்: பின்னணி என்ன?

Report Print Basu in இந்தியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான வழக்கில், உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளை நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.

advertisement

இந்நிலையில், சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டும், விலங்குகள் நலவாரியம் வழக்கு தொடர்ந்ததால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது.

கடந்த ஓராண்டாக உச்சநீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துவிட்டன.

இதையடுத்து வழக்கின் தீர்ப்பு இன்றோ அல்லது நாளையோ வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது என்றும், சீக்கிரம் தீர்ப்பை வழங்குங்கள் என கூறுவது முறையல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜல்லிக்கட்டு குறித்து தீர்ப்பு எழுதப்பட்டு வருவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் முடிவால் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments