ராஜீவ் காந்தியின் மரணத்தை முன்கூட்டியே கணிந்த அமெரிக்கா: வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து முன்கூட்டியே அமெரிக்க உளவு அமைப்பு கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை பற்றி அமெரிக்க மத்திய உளவு அமைப்பு (சிஐஏ) , கடந்த 1986-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ‘ராஜீவுக்குப் பிறகு இந்தியா’ என்று தொடங்கும் தலைப்பில் 23 பக்க அறிக்கையை சிஐஏ தயாரித்து இருந்தது.

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் இந்த அறிக்கையை சிஐஏ சமீபத்தில் வெளியிட்டது.

இந்த அறிக்கையின் முதல் வரியில், பதவிக் காலம் முடிவடைவதற்குள் (1989) பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது, ராஜீவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு, 1991-ம் ஆண்டு மே 21-ம் திகதி தமிழகத்தில் (ஸ்ரீபெரும்புதூர்) தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த அறிக்கையின் முதல் பகுதியில் (முக்கிய தீர்ப்புகள்), ராஜீவுக்குப் பிறகு திடீரென தலைமையில் மாற்றம் ஏற்பட்டால் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியலில் எத்தகைய மாற்றம் ஏற்படும், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் அண்டை நாடுகளுடனான இந்திய அரசின் உறவு எப்படி இருக்கும் என அலசப்பட்டுள்ளது.

எனினும் இந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. எனவே, இலங்கை விடுதலைப்புலிகள் அமைப்பினால் ராஜீவ் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்ததா என குறித்த தகவல்கள் தெளிவா இடம்பெறவில்லை.

அதேநேரம், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காண ராஜீவ் முயற்சி மேற்கொண்டது பற்றி ஆழமாக இந்த அறிக்கையில் அலசி ஆராயப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments