கடலில் கலந்த எண்ணெய்: திக்குமுக்காடும் அதிகாரிகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கடந்த 27ம் திகதி மும்பையில் இருந்து டீசல் ஏற்றிக் கொண்டு எண்ணூரை நோக்கி வந்த டான் காஞ்சீபுரம் என்ற கப்பல் மீது ஈரான் கப்பல் ஒன்று மோதியது.

இதில் மும்பையில் இருந்து டீசலை ஏற்றிக் கொண்டு வந்த கப்பல் சேதமடைந்து, டீசல் கடலில் கொட்டியது.

இந்த டீசல் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவியது. டன் கணக்கில் கொட்டப்பட்ட எண்ணெய்யை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

கடலோர காவல்படையினர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு பணியாளர்கள், அதிகாரிகள், அந்ததந்த பகுதியில் வசிக்கும் மீனவர்கள் ஆகியோர் கடலில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொட்டிய எண்ணெய்யை முறையான கருவிகள் கொண்டு அகற்றப்படாமல் பெயிண்ட் வாளிகள் உள்ளிட்ட வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே எண்ணெய் அப்புறப்படுத்தப்படுகிறது.

டீசல் கடலில் கலந்துள்ளதால் மீன்களை உண்ண மக்கள் விருப்பம் காட்டாமல் உள்ளதால் மீன் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்களும் கடலுக்குள் சென்று மீன் பிடியில் ஈடுபடாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments