முதல்வரான முதல் நாளிலே! பன்னீரை பழி தீர்த்த சசிகலா ஆதரவாளர்கள்: என்ன செய்தார்கள் தெரியுமா?

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

தமிழகத்தில் தேனியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற அலுவலகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நாட்டின் போடிநாயக்கனூர் தொகுதி சட்டசபை உறுப்பினராக உள்ளார் பன்னீர் செல்வம். அவரது அலுவலகம் அப்பகுதியில் உள்ள சுப்புராஜ் நகரில் உள்ளது.

இந்நிலையில் போடியில் சசிகலா ஆதரவாளர்கள் இன்று ஊர்வலம் நடத்தினர். ஊர்வலம் முடிந்த சிறிது நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகத்திற்குள் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது.

அங்கிருந்த நாற்காலிகளை அடித்து உடைத்து கல்வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நகர மாணவர் அணி செயலாளர் ராஜவேல் என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

அவர் லேசான காயம் அடைந்தார். அதன் எதிரொலியாக அருகில் உள்ள அ.தி.மு.க. நகர செயலாளர் பாலமுருகன் வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கல்வீசியதாக கூறப்படுகிறது. இதில் வீட்டுக்குள் இருந்த கார் லேசாக சேதம் அடைந்து உள்ளது. இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அவர் பதவி வகித்த முதல் நாளிலே சசிகலா ஆதரவாளர்கள் இப்படி செய்திருப்பது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments