கொந்தளித்தார் ஓபிஎஸ்! காவல்துறையினருக்கு கடும் எச்சரிக்கை!

Report Print Basu in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காவல்துறையினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள் தாங்கள் விரும்பாத ஒரு ஆட்சி அமைவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதற்குத் துணைபோகும் தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தங்களது மன உணர்வுகளைத் தெரிவிப்பதற்காகவும், அமைதியான முறையில் யாருக்கும் எந்தவித இடையூறு இல்லாமலும் தங்களது கண்டனத்தை தமிழ்நாடு முழுவதும் தெரிவித்து வருகிறார்கள்.

அவர்களையெல்லாம் காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்திருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தயவு செய்து கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களை காவல்துறையினர் உடனே விடுவிக்க வேண்டும்.

ஜெயலலிதா தமிழ்நாட்டை அமைதிப்பூங்காவாக மாற்றி வைத்திருந்தார். அந்த நிலைமையை காவல்துறையினரே மாற்றிவிட வேண்டாம் என்று அன்போடு காவல்துறையினரை கேட்டுக்கொள்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments