பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது? சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்

Report Print Basu in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த எம்.பி மைத்ரேயன் உட்பட 11 எம்.பி.க்கள், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுத்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த மனு மீதான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களுரு சிறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் 28ம் திகதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டு மென்று தேர்தல் ஆணையம் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.

பதிலளிக்க தவறினால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments