எடப்பாடிக்கு எதிராக வாக்களியுங்கள்: ராகுல்காந்தி அதிரடி உத்தரவு

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களியுங்கள் என்று காங்கிரஸ் எம்எம்ஏக்களுக்கு, அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி அதிரடி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அரசியல் சூழ்நிலை மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் யாருக்கு அதிமுக எம்எல்ஏக்களின் பெரும்பான்மை இருக்கிறது என்பதில் சசிகலாவும், பன்னீர்செல்வமும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றவாளியாக சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் யாருக்கு பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்பது தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது.

இதனால் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் தங்கள் பக்கம் எம்எல்ஏக்களை இழுப்பதற்கு பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்குமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் ராகுல்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments