நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல சசிகலா தரப்பு அதிரடி வியூகம்: அதிர வைக்கும் பேரம் அம்பலம்

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக கூவத்தூரில் அரங்கேறிய பேரங்கள் அதிர வைப்பதாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக எம்.எல்.ஏக்கள் 10 நாட்களாக சசிகலா கோஷ்டியால் கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சி நிலைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒற்றுமையாக சுதந்திரமாக இருக்கிறோம்; பாதுகாப்பாக இருக்கிறோம் என அவர்கள் பேசி வருகின்றனர். இதனால் அத்தனை தொகுதி மக்களும் எம்.எல்.ஏக்கள் மீது கடுங்கோபத்தில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் 5 கோடி வரை பேரமாக பேசப்பட்டதாகவும், இதில் முதல் தவணையாக 2 கோடி அனைத்து எம்.எல்.ஏக்கள் உறவுகள் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் அதிமுக அரசு நீடிக்கும் வரையில் ஒவ்வொரு மாதத்துக்கும் 10 லட்சம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படுமாம். மட்டுமின்றி சீனியர்களுக்கு வாரியங்கள் ரெடியாக உள்ளதாம்.

இதுமட்டுமின்றி பதவி வெறி அடங்காத உறுப்பினர்களுக்காக அமைச்சரவை அடிக்கடி மாற்றி அமைக்கப்பட்டு ஒவ்வொரு இலாகாவுக்கும் ஒரு தனி அமைச்சர்.. எனவும் உறுதி கொடுக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments