சிறையில் சசிகலா செய்து வரும் அதிரடி விடயம்

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா தனது சுயசரிதையை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறைக்குள் போன சசிகலா தினமும் அதிகாலையிலேயே எழுந்துவிடுகிறாராம். பின்னர் சிறையிலேயே நடைபயிற்சி செய்யும் அவர் தியானமும் செய்கிறாராம்.

மேலும், தனது அண்ணி இளவரசியுடன் அமர்ந்து பழைய சம்பவங்களை பேப்பரில் எழுதி வரும் சசிகலா விரைவில் சுயசரிதையாக அதை மாற்றவுள்ளாராம்.

மேலும், தனது சுயசரிதையை எழுத சிறை அதிகாரிகளிடம் லேப்டாப் சாதனத்தை கேட்கலாமா என சசிகலா யோசித்து வருகிறார் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments