பெயரால் கடும் சிக்கலில் மாட்டிய இளைஞர்: வேலைக்கு அமர்த்த அஞ்சுவதாய் கதறல்

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவில் இளைஞர் ஒருவர் சதாம் ஹுசைன் என்ற தமது பெயர் காரணமாக எந்த நிறுவனமும் தம்மை வேலைக்கு அமர்த்த அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.

ஈராக்கின் முன்னாள் தலைவர் சதாம் ஹுசைன் உயிரிழந்து நீண்ட 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், சதாம் என்ற பெயருடைய இந்தியர் ஒருவருக்கு குறித்த பெயரால் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

25 வயதான சதாம் ஹுசைன் கடல்துறை பொறியாளராக பட்டம் பெற்றுள்ளார். ஆனால் இதுவரை 40-கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு வேலை கேட்டு விண்ணப்பித்தும் எவ்வித பலனும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மனமுடைந்த சதாம் சில நிறுவனங்களில் நேரிடையாக காரணம் என்ன என்பதை விசாரித்துள்ளார். அப்போது அவர்கள் கூறிய பதில் சதாம் ஹுசைனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனையடுத்து தமது பெயரை சஜித் என மாற்றிக்கொண்டு தற்போது ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு மற்றும் அரசு அடையாள அட்டைகளுக்காக விண்ணப்பித்துள்ளார்.

பெயர் மாற்றிய பின்னர் மீண்டும் வேலை தேடும் படலத்தில் இறங்க வேண்டும் என சதாம் என்ற சஜித் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments