International
Notification
Notification
Submit Cancel

தனுஷ் உடலில் எந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டன? அடுத்து இந்த பரிசோதனை தான்

Topics :
advertisement

பிரபல திரைப்பட நடிகரான தனுஷின் உடலில் எந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டன என்பது தொடர்பாக மருத்துவ அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்கள் மகள் என்று மேலூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்த செய்யக்கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது உடலில் உள்ள அங்க அடையாளங்களை லேசர் சிகிச்சையின் மூலம் அழித்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனுஷ் தனது உடலில் உள்ள சில மச்ச அடையாளங்களை அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மருத்துவ அறிக்கை தனுஷ் வழக்கின் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

இதையடுத்து வழக்கின் விசாரணை மீண்டும் 27ம் திகதிக்கு வருகிறது. அன்றைய தினம் வழக்கின் அடுத்தகட்டமாக கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தனுஷுக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிபதியிடம் வலியுறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
advertisement
advertisement