நடுரோட்டில் பெண் மீது கொடூர தாக்குதல் நடத்திய பொலிஸ்: அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
187Shares
187Shares
lankasrimarket.com

தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராடிய பெண்ணை பொலிஸ் அதிகாரி அடித்ததில் அவர் காது கேட்கும் திறன் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக டாஸ்மாக் மதுபான கடையை திறக்க பொது எதிர்ப்பு தெரிவித்தனர்.

டாஸ்மாக் கடை திறப்பை எதிர்த்து 7 மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

நிலைமையை சமாளிக்க அங்கு வந்த பொலிசார் பொது மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தினார்கள்.

அப்போது அங்கு வந்த கூடுதல் பொலிஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி (45) என்ற பெண்ணின் கன்னத்தில் காட்டுமிராண்டித்தனமாக ஓங்கி அறைந்தார்.

இந்த அதிர்ச்சி காட்சி வீடியோவாக இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், அடிப்பட்ட ஈஸ்வரிக்கு காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாண்டியராஜனை பதவி நீக்கம் செய்யக்கோரி போராட்டம் நடந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments