டிடிவி தினகரன் கட்சியிலிருந்து நீக்கம்? இரு அணிகளும் இணைவதன் பரபரப்பு பின்னணி

Report Print Fathima Fathima in இந்தியா
831Shares
831Shares
lankasrimarket.com

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக-வையும், ஆட்சியையும் பிடிக்க அரும்பாடுபட்டது சசிகலா குடும்பம்.

அவர்கள் நினைத்தபடியே கட்சியை கைக்குள் கொண்டுவருவதற்காக சசிகலா பொதுச்செயலாளர் ஆனார்.

தொடர்ந்து ஆட்சியை பிடிக்க முயற்சி செய்ததால் அதிமுக இரண்டாக உடைந்து சசிகலா தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என பிரிந்து நின்றது.

மாபெரும் திருப்பமாக சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, திவாகரன் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்க மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனால் சசிகலாவின் அக்கா மகனான டிடிவி தினகரன் அதிமுக-வின் துணை பொதுச்செயலாளரானார்.

தொடர்ந்து சசிகலா குடும்பத்தின் நடவடிக்கைகளால் அதிமுக-வே ஆட்டம் கண்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது, பணப்பட்டுவாடா செய்தது அம்பலமானதால் தேர்தலே ரத்தாகிபோனது.

இதனால் கடுப்பில் இருந்த மூத்த அமைச்சர்கள் டிடிவி தினகரனை சந்தித்து, அதிமுகவை ஜெயலலிதா கஷ்டப்பட்டு வளர்த்தார். எங்கள் கண்முன்னே கட்சி அழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் உங்கள் குடும்பம் தான் என கூறியுள்ளனராம்.

இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், சித்தியை சந்தித்து முடிவெடுத்த பின்னர் பதில் அளிக்கிறேன் என கூறினாராம்.

இதற்கிடையே இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்தது ஆதாரத்துடன் தெரியவந்தது.

இதனால் தம்பிதுரையை தொடர்பு கொண்ட மத்திய அரசு, சசிகலாவை தூக்கிப்பிடிக்காமல் இருங்கள், டிடிவி தினகரன் மீதான வழக்கில் வலுவான ஆதாரம் உள்ளது என எச்சரித்ததாம்.

இதில் மிரண்டு போன தம்பிதுரை மூத்த அமைச்சர்களை சந்தித்து, மத்திய அரசு ஓபிஎஸ் அவர்கள் பக்கம் உள்ளது, ஓபிஎஸ்-வுடன் இணைவது தான் சரி என கூறியுள்ளார்.

தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார், இரு அணிகளும் இணைவது என முடிவு செய்யப்பட்ட நிலையிலேயே நேற்றிரவு அமைச்சர் தங்கமணி வீட்டில் கூட்டம் நடைபெற்றுள்ளது.

கூட்டத்தில், டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்க முடிவெடுத்துள்ளதாகவும், அமைச்சர் தங்கமணி மூலமாகவே ஓபிஎஸ்-வுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments