அசத்திய வைர வியாபாரி: பாஸ்னா இப்படித்தான் இருக்கணும்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக இருசக்கர வாகனத்தை வாங்கிகொடுத்து அசத்தியுள்ளார்.

குஜராத்தில், சூரத் பகுதியில் வைர வியாபாரம் செய்துவரும் லக்ஷ்மிதாஸ் வெக்கரியாவின் நிறுவனத்தில் மொத்தம் 125 பேர் வேலை செய்கின்றனர்.

இந்த மாதம், ஊதிய உயர்வாக ஒவ்வொருவருக்கும் இருசக்கர வாகனத்தைக் கொடுத்து அசத்தி இருக்கிறார். பகுதி நேரப் பணியாளர்களில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவருக்குமே ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி பணியாளர்களுக்கு ஸ்கூட்டர் வழங்குவதை ஒரு விழாவாக எடுத்து, சூரத் மக்களை வாயடைக்கச் செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments