உலகளவில் டிரெண்டான தமிழச்சி- அப்படி என்ன சாதித்துவிட்டார்?

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழ்நாட்டில் தன் நகைகளை விற்று அந்த பணத்தில் அரசாங்க பள்ளியின் வகுப்பறையை டிஜிட்டல் முறையில் மாற்றியுள்ளார் அன்னபூர்ணா என்னும் ஆசிரியை.

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த பள்ளிக்கூடத்தின் மூன்றாம் வகுப்பு மற்ற அரசு பள்ளியை போல இல்லாமல், தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் டிஜிட்டல் மயமாக காட்சியளிக்கிறது

இதற்கெல்லாம் காரணம் அன்னபூர்ணா என்னும் ஆசிரியை தான்.

தன்னிடம் பயிலும் மாணவர்கள் தரமான கல்வியை பெற வேண்டும் என்பதற்காக அன்னபூர்ணா தன் நகைகளை விற்று அந்த பணத்தில் டிஜிட்டல் ஸ்மார்டு போர்ட், மாணவர்களுக்கு புத்தகங்கள், வகுப்பறையில் அழகான நாற்காலிகள், டேபிள்கள் போன்றவற்றை அமைத்துள்ளார்.

மேலும் இவர் கொடுத்து வரும் பயிற்சி காரணமாக இவர் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலத்தை நுனிநாக்கில் சரளமாக பேசி அசத்துகிறார்கள்.

இதுகுறித்து ஆசிரியை அன்னபூர்ணா கூறுகையில், என் வகுப்பில் நல்ல சூழல் உருவாக வேண்டும் என்பதற்காகவே இதை செய்தேன்.

மாணவர்களிடம் வகுப்பு ஆரம்பம் முதல் முடிவு வரை ஆங்கிலத்தில் தான் உரையாடுவேன்.

ஆங்கில பாடங்களை உரையாடல் வடிவிலும், நாடகவடிவிலும் நடத்துகிறேன். முதலில் அவர்கள் புரிந்து கொள்ள கஷ்டப்பட்டாலும் பின்னர் புரிந்து கொள்ள தொடங்கினார்கள் என கூறியுள்ளார்.

மேலும், தனியார் பள்ளிகள் அளவுக்கு அரசு பள்ளியில் கல்வி தரம் இல்லை என கூறும் இவர் கொஞ்சம் முயற்சி செய்தால் அது போன்ற கல்வியை அரசு பள்ளிகளிலும் தர முடியும் என கூறுகிறார்.

மாணவர்கள் ஆங்கிலம் பேசும் வீடியோவை அன்னபூர்ணா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதற்கு உலகம் முழுவதிலுமிருந்து பேரதரவு கிடைத்து வருகிறது. கனடா, சிங்கப்பூர் மக்கள் இவரை வெகுமாக பாராட்டி வருகிறார்கள்.

அன்னபூர்ணாவின் செயலை பார்த்த மக்கள் பலர் அந்த அரசு பள்ளிக்கு நன்கொடை தர ஆரம்பித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments