ஓபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை எப்போது? குழுவை நிர்ணயித்த அம்மா அணி

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக அம்மா அணி சார்பில் ஓபிஎஸ் அணியுடன் பேச வைத்தியலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கு பின் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணியுடன் பேச வைத்தியலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

வைத்தியலிங்கம் தலைமையில் எஸ்பி வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்ட 7 பேர் குழுவில் உள்ளனர்.

ஓபிஎஸ் தரப்பினர் எந்த நேரமும் இவர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments