நடிகர் கமல்ஹாசனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

மகாபாரதம் குறித்து சர்ச்சையான விடயத்தை கூறியதாக கமல்ஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சில வாரங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை அவதூறாகப் பேசியதாக அவர் மீது ஒரு பிரிவினர் வள்ளியூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கின் விசாரணை ஏற்கனவே ஒரு தடவை நீதிமன்றத்தில் வந்து பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கில் நடிகர் கமல்ஹாசன் வள்ளியூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments