ஜெயலலிதா அடித்து கொலை செய்யப்பட்டார்: பொன்னையன் பரபரப்பு தகவல்

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

ஜெயலலிதா அடித்து கொல்லப்பட்டதாகவும், அதை நேரில் பார்த்த வேலைக்கார பெண்மணி என்னவானார் என்றே தெரியவில்லை எனவும் பொன்னையன் பகீர் பேட்டியளித்துள்ளார்.

அதிமுகவில் முதலில் சசிகலா அணியில் அங்கம் வகித்து பின்னர் ஓ.பி.எஸ் அணிக்கு வந்தவர் முன்னாள் அமைச்சர் பொன்னையன்.

அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னால் தாக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவிடம் சிலர் ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து கேட்டுள்ளனர். கையழுத்து போட அவர் மறுத்ததால் அவர் தாக்கப்பட்டார்.

தாக்கப்பட்டதன் விளைவால் தான் ஜெயலலிதாவின் கன்னத்தில் நான்கு ஓட்டைகள் காயங்களாக ஏற்பட்டன.

ஜெயலலிதா தாக்கப்பட்டதை ஒரு வேலைக்காரி பார்த்துள்ளார். ஆனால் அதற்கு பின்னால் அவர் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை என பொன்னையன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments