ஒரு கண்ணுடன் பிறந்த ஆட்டை வழிபடும் மக்கள்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டை புனிதமாக கருதி அப்பகுதி மக்கள் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்.

அசாம் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்னர் ஒற்றை கண்ணுடன் ஆடு ஒன்று பிறந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் இந்த ஆடு புனிதமானது, கடவுளுடைய கொடை என்று கூறி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், மூளையில் உள்ள வலது மற்றும் இடது ஆகிய இரண்டு பகுதிகளும் சரியாக பிரியாமல் ஒன்றோடு ஒன்று ஒட்டி ஏற்பட்ட பிரச்சனையால் தான் ஒரு கண்ணுடன் இந்த ஆடு பிறந்ததாகவும், ஒருசில நாட்களே உயிரோடு இருக்கும் என மருத்துவர்கள் கூறிய நிலையில் அந்த ஆடு தற்போது ஆரோக்கியமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒற்றை கண்ணுடன் பிறந்த இந்த ஆட்டை பார்ப்பதற்கு அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments