நடிகர் கலாபவன் மணி மரண வழக்கில் முக்கிய திருப்பம்

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் சந்தேகமிருப்பதாக அவர் குடும்பத்தார் தொடர்ந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

தமிழில் ஜெமினி, எந்திரன் போன்ற திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் கலாபவன் மணி.

advertisement

இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவரது பண்ணை வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

இந்நிலையில் கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும் அவர் குடும்பத்தார் கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி கலாபவன் மணியின் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டார்.

ஒரு வருடத்துக்கு மேலாக கலாபவன் மணியின் மரணத்தில் நிலவும் மர்மம் விரைவில் விலகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments