எதற்காக ரஜினி இப்படி செய்கிறார்?

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு கடந்த 22 வருடங்களாக தமிழகத்தில் அடிபட்டு வருகிறது.

அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பேச்சும், அவர் வரமாட்டார் என்ற பேச்சும் மாறி மாறி ஒலித்ததால், அதனை கேட்டு மக்களின் காதுகள் செவிடாகிப்போனதையடுத்து ரஜினிகாந்தின் அரசியல் பயணம் குறித்த செய்தியை கண்டுகொள்ளாமல் விட்டனர்.

ஆனால், அந்த பழைய கதையை தற்போது தூசிதட்டி எடுத்துள்ளார் ரஜினிகாந்த், ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து தனது ரசிகர்களை சந்தித்து வரும் அவர், அரசியல் பயணம் குறித்து சூசமாக பேசி வருகிறார்.

தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளில், ரஜினியின் அதிக ஆதரவு திமுகவுக்கு இருந்தது.

1995 ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்பட வெளியீட்டு விழாவின் போது ரஜினி பேசிய அரசியல் பேச்சு அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது, இதன் விளைவாக அதிமுகவின் கோபத்திற்கு ஆளானார்.

ரஜினியின் காரினை நிறுத்தி சோதனை மற்றும் மறைமுக எதிர்ப்புகளை சந்தித்தார். அதிமுக எதிர்த்தாலும், ரஜினியை எப்படியாவது பயன்படுத்தி கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி போட்ட திட்டம் வெற்றி அடைந்தது.

அதன்படியே, திமுகவுக்கு ஆதரவாக அரசியல் உலகில் குரல் கொடுத்தார் ரஜினி, திமுக மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் ரஜினியை தங்கள் கட்சிக்குள் இணைத்துவிட வேண்டும் என முயற்சி செய்தது.

ஆனால், ரஜினிகாந்தோ, ஆண்டவன் கட்டளையிட்டால் எல்லாம் நடக்கும் என்று கூறிவந்தார், ரஜினி திமுகவுக்கு கொடுத்த குரலை பார்த்து, ஜெயலலிதாவும் ரஜினியுடன் நட்புறவு காட்ட ஆரம்பித்தார்.

ரஜினியை நேரடி அரசியலுக்கு பல கட்சிகளும் இழுத்துப் பார்த்தன. ஆனால் ரஜினி யார் பக்கமும் சேரவில்லை.

இந்த நிலையில்தான் தற்போது ரஜினி அரசியல் குறித்து பேச ஆரம்பித்துள்ளார். இத்தனை காலமாக இல்லாத ஆர்வம் இப்போது ஏன் வந்துள்ளது என டொலர் கேள்வியாக உள்ளது.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரும் இல்லாத காரணத்தால், அதனை பயன்படுத்தி அரசியலுக்குள் பிரவேசம் செய்ய ரஜினி திட்டமிட்டுள்ளது போன்றே அவரின் சூசமான பேச்சுக்களில் இருந்து தெரியவருகிறது.

நான் ஒரு பச்சை தமிழன் என மேடைக்கு மேடை முழங்கி வரும் ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழக மக்களுக்கு என்ன செய்வார் என்பதே மில்லியன் டொலர் கேள்வியாக உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments