இந்தக் கிராமத்து இளைஞர்களைப் பெண்கள் திருமணம் செய்வதில்லை

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீ தாரா மஜ்ரா கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆண்களைத் திருமணம் செய்யப் பெண்கள் மறுத்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அல்லாபாத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது ஸ்ரீ தாரா மஜ்ரா கிராமம். இந்தக் கிராமம், மணமாகாத ஆண்கள் கிராமம் என்றே அழைக்கப்படுகிறது.

இங்கு சுமார் 1,000 பேர் வசித்து வருகின்றனர். ஆனால், அடிப்படைத் தேவையான தண்ணீருக்குக் கடும் பஞ்சம் நிலவுகிறது. மேலும், இங்கு மின்சார வசதியும் இல்லை. இதனால், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆண்களைத் திருமணம் செய்யப் பெண்கள் மறுத்து வருகின்றனர்.

ஸ்ரீ தாரா மஜ்ரா கிராமத்தில் இருக்கும் பெண்கள் மட்டுமல்ல, அருகிலிருக்கும் மாவட்டங்களில் உள்ள பிரதாப்கர், கவுஷாம்பி, சித்ரகுட் போன்ற கிராமங்களில் உள்ள பெண்களும் ஸ்ரீ தாரா மஜ்ரா கிராமத்து இளைஞர்களைத் திருமணம் செய்ய மறுக்கின்றனர்.

அவர்களைத் திருமணம் செய்தால் மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் அன்றாட வாழ்க்கை கடினமாக இருக்கும் எனக் கருதுகின்றனர்.

இந்தக் கிராமத்தில் 18- 29 வயதுக்குட்பட்ட சுமார் 50 இளைஞர்கள் உள்ளனர். இவர்கள் திருமணம் செய்ய மணமகள்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருமணம் செய்துகொண்ட சில அதிர்ஷ்டசாலி மணமகன்களுக்கு வரதட்சணையாகத் தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி, மின்விசிறி போன்றவை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மின்சாரம் இல்லாததால் அதைப் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தக் கிராமத்தில் சில கிணறுகள் உள்ளன. ஆனால், அதில் இருக்கும் தண்ணீர் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றதாக உள்ளது.

இந்த மொத்த கிராமத்துக்கும் ஒரே ஒரு தண்ணீர் பம்ப் மட்டுமே உள்ளது. அதுவும் கடந்த 2002ஆம் ஆண்டு கிராமத்தாரால் நிறுவப்பட்டுள்ளது.

தண்ணீர் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பலர் பக்கத்துக் கிராமங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments