தமிழகத்தில் இலங்கை அகதி தூக்கிட்டு தற்கொலை

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

தமிழகத்தில் அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கரூர் ராயனூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் அந்தோணிராஜ், இவரது மகன் ஜான்சன்(வயது 21).

சுமை தூக்கும் தொழிலாளியான ஜான்சனுக்கும், அதே முகாமை சேர்ந்த கிருத்திகா என்ற பெண்ணுக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

ஜான்சன் மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்துள்ளார், மதுப்பழக்கத்தை கைவிடும்படி கிருத்திகா வற்புறுத்தியுள்ளார்.

இதனால் விரக்தியில் இருந்த ஜான்சன் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பசுபதிபாளையம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments