சாமியாரின் மர்ம உறுப்பை துண்டித்தது யார்? தாயார் வாக்குமூலம்

Report Print Fathima Fathima in இந்தியா
615Shares
615Shares
lankasrimarket.com

கேரளாவில் கொல்லம் நகரிலுள்ள பன்மனா ஆசிரமத்தைச் சேர்ந்தவர் ஹரிஸ்வாமி(54).

இவரது ஆணுறுப்பை சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் அறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறுகையில், எனது தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார், குணப்படுத்துவதாக கூறி என் வீட்டுக்கு வரும் ஹரிஸ்வாமி என்னை கடந்த எட்டு ஆண்டாக கற்பழித்து வந்தார்.

ஒருகட்டத்தில் ஆத்திரம் தாங்காமல் அப்படி செய்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

ஆனால் தனக்கு தானே அறுத்துக் கொண்டதாகவும், பாலியல் குற்றம் சுமத்துவது கண்டிக்கத்தக்கது எனவும் ஹரிஸ்வாமி தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் தாயார் பொலிசில் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது மகள் மனநிலை சரியில்லாதவர், அவரது ஆண் நண்பர் தான் இப்படி செய்துவிட்டார், சாமியாருடன் நெருக்கமாக இருப்பதை ஆண் நண்பர் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments