கண் தெரியாத மாணவி செய்த சாதனை: உருக்கமான வேண்டுகோள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

புதுச்சேரியை சேர்ந்த கண் தெரியாத மாணவி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 445 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கண் தெரியாத கூடைப் பின்னும் தொழிலாளி சுப்பன் (55). 38 ஆண்டுகளாக சட்டசபை அருகே செயிண்ட் தான்ழ் வீதி நடைபாதையில் கூடை மற்றும் சேர் இருக்கைகளைப் பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

advertisement

சட்டசபை அருகிலுள்ள கிறிஸ்தவ பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களிலுள்ள இருக்கைகளைப் பழுதுபார்க்க குறைந்தளவு கூலியே வாங்குகிறார்.

அவரது மனைவி தனலட்சுமி (46), மற்றும் மகள் சுபலட்சுமி, மகன்கள் சுதர்சன், சுசிந்தர் என மூன்று பேர் உள்ளனர்.

இவர்களில் அவரது மனைவி மற்றும் மகள் கண் தெரியாதவர்கள். இருந்தும் வீட்டில் சமையல் பொறுப்பு முழுவதையும் பார்த்துக்கொண்டு, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 445 மதிப்பெண் எடுத்துள்ளார் சுபலட்சுமி.

மகன்கள் இரண்டு பேரும் பள்ளியில் படித்து வருகின்றனர். தனது குடும்பத்தைக் காப்பாற்ற போதிய வருமானம் இல்லாத காரணத்தால் புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியில் குறைந்த வாடகை வீட்டில் வசித்து வருகிறார் சுப்பன்.

தற்போது இவருக்குப் புதுச்சேரி அரசு மூலம் வழங்கப்படும் இலவச வீடு மற்றும் தனது மகளை மாவட்ட ஆட்சியராக்க வேண்டும் என்பதே தொழிலாளி சுப்பனின் விருப்பம்.

வீடியோவை காண

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments