நடிகர் விஜய் குறித்து அவரது தந்தை பேட்டி

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என அவரது தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது குறித்த தகவல்கள் சமீபகாலமாக அடிபடுகிறது.

இதற்கிடையில் விஜய் அரசியலுக்கு வந்தால், அவரது மக்கள் இயக்கம் தான் அதனை முன் நின்று நடத்துமா? என்ற கேள்வி விஜய்யின் தந்தை சந்திரசேகரிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சந்திரசேகர், மக்கள் இயக்கத்தின் நிறுவனத்தலைவர் நான், அதில் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளார்கள். அவர்களை வழிநடத்தும் பணியினை நான் செய்து வருகிறேன்.

மேலும், விஜய் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பதை அவர் தான் கூற வேண்டும், நான் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments