பெற்றோர் துன்புறுத்தலால் தற்கொலை செய்த காதல் ஜோடி - கணவனுக்கு ஆயுள் தண்டனை

Report Print Nithya Nithya in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

பெற்றோரின் தொடர் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின் வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

1995-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு தற்போது ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதலர்கள் திருமணம் செய்துள்ளனர். ஆனால், பெற்றோர்களின் தொடர் துன்புறுத்தலால் மனமுடைந்த காதலர்கள் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதில் காதலன் பிழைத்துக்கொள்ள, காதலி மரணமடைந்துவிட்டார்.

இந்த வழக்கில் அந்தப் பெண்ணை, காதலன் கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயற்சித்ததாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் காதலன் மீது குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என தன் காதலியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் காதலன். இருவரும் விஷம் எடுத்துக்கொண்டுள்ளனர். இதில் காதலி விஷம் அதிகமாக எடுத்துக்கொண்டதால் உயிருக்கு தவித்து வந்துள்ளார்.

உதவி தேடிச் சென்ற காதலன் திரும்பி வரும் முன்னர், அப்பெண் வலி பொறுக்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் காதலனுக்கு இந்தியச் சட்டப்படி ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments