தகர்ந்து போன சாம்பியன்ஸ் கனவு: டோனியின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள் டிவியை போட்டு உடைத்துள்ளனர்.

இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் தொடர் பைனலில் பாகிஸ்தான் அணியுடன் 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பரிதாபமான தோல்வியை சந்தித்தது.

பாகிஸ்தானுடன் கண்டிப்பாக வெற்றிபெற்று கிண்ணத்துடன் இந்திய அணி நாடு திரும்பும் என்றிருந்த நிலையில், பரிதாபமாக தோற்றது ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள், உத்தரகாண்ட்டின் ஹரித்துவார், உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மற்றும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பால்டி ஆகிய பகுதிகளில் டிவியை சாலைகளில் தூக்கி வந்து போட்டு உடைத்துள்ளனர்.

இதனிடையே முக்கிய வீரர்களின் வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள டோனியின் இல்லத்தின் முன் பாதுகாப்புக்கு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments