சென்னை புதுமண தம்பதி மீது துப்பாக்கி சூடு: மர்ம நபர்களுக்கு வலை

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

உத்தரபிரதேச மாநிலத்தில் சென்னை தம்பதி மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராமாவரத்தைச் சேர்ந்த ஆதித்யா குமாரும், விஜயலட்சுமியும் புதிதாக திருமணம் முடித்த தம்பதியினர். இவர்கள் இருவரும் அவர்களின் பொது நண்பரான ஷ்யாம் தேஜா வழிகாட்டுதல்படி, சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளனர்.

பின்னர், ஜோடிகள் இருவரும் ஒரு புல்லட்டிலும், நண்பர் ஷ்யாம் தேஜா மற்றொரு புல்லட்டிலும் என வாடகைக்கு புல்லட்களை எடுத்துக்கொண்டு, ஹரித்வாருக்குப் பயணமாகியுள்ளனர்.

இந்த நிலையில் தங்களின் புல்லட் வாகனத்தில் நான்கு மணியளவில் டெல்லி திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது உத்தரப் பிரதேச மாநிலம், முஷாபர் நகர் அருகே, தேசிய நெடுஞ்சாலை 58 ஆம் பாதையில் வருகையில், திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு ஆதித்யா குமாரின் கழுத்தை பதம் பார்த்தது.

இச்சம்பவத்தால் உடனே, ரத்த வெள்ளத்தில் சரிந்தார், ஆதித்யா. அருகில் அமர்ந்திருந்த அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இருசக்கரவாகனத்தில் இருந்து கீழேவிழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஷ்யாம் தேஜா உடனடியாக டெல்லி பொலிசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்,தேஜா.

இப்போது இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறது உத்தரப்பிரதேச பொலிசார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments