ஜெயலலிதா தனது சொத்துக்கள் என்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துக்களின் பட்டியல்.
நாட்டியக் கலா நிகேதன் பெயரில் உள்ளவை
10 கிரவுண்ட் இடத்தில் போயஸ் கார்டன் வீடு.
ஸ்ரீநகர் காலனி வீடு, ஹைதராபாத்.
15 ஏக்கர் திராட்சைத் தோட்டம், ஜீடிமெட்லா, ஹைதராபாத்.
2.5 கிரவுண்ட் நிலம், மணப்பாக்கம், சென்னை.
ஜெயலலிதா பெயரில் உள்ளவை
செயின்ட் மேரீஸ் சாலை வணிகக் கட்டடம், சென்னை.
கடை எண் 18. பார்சன் காம்ப்ளக்ஸ், அண்ணா சாலை, சென்னை.
3.5 ஏக்கர் விவசாய நிலம், செய்யூர், காஞ்சிபுரம்.
உயில்
சசிகலாவும் ஜெயலலிதாவும் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களின் பெயரில் உள்ளவை
பிரின்டிங் பிரஸ், கட்டடம் மற்றும் மெஷின்கள், கிண்டி தொழிற்பேட்டை.
நமது எம்.ஜி.ஆர் செய்தித்தாள்.
பட்டம்மாள் தெருவில் உள்ள வீடு, மந்தைவெளி, சென்னை.
கடை எண் 14, பார்சன் காம்ப்ளெக்ஸ், அண்ணாசாலை, சென்னை.
கடை எண் 9, ஜெம்ஸ் கோர்ட் காம்ப்ளெக்ஸ், நுங்கம்பாக்கம், சென்னை.
6. 3.5 ஏக்கர் நிலம், சுந்தரக்கோட்டை, மன்னார்குடி.
7. 8.5 கிரவுண்டில் உள்ள வீடு, தஞ்சாவூர்.
வாகனங்கள்
கன்டெசா கார் (TN 09 - 0033) - 1
அம்பாசடர் கார் (TN 3585) - 1
மாருதி கார் (பதிவு எண்-2466) - 1
ஸ்வராஜ் மஜ்டா வேன் - 3
டாப் ஏசியுடன் கூடிய ஜிப்சி - 1
கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டர்(பதிவு எண்: TSF-9585) ・1
ஜீப் - 2
இந்தச் சொத்துக்கள் என்ன ஆகும்?
இந்து வாரிசு உரிமை (அ) இறங்குரிமைச் சட்டம், பிரிவு 15, 16-ன்படி, ஒரு பெண்ணின் சொத்துக்கள் முதலில் மகன், மகள் மற்றும் கணவருக்குச் சமமாகச் சென்று சேரும். ஒரு பெண் திருமணம் ஆகாமல் மரணம் அடையும் போது, அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்குச் சொத்துக்கள் போகும்.
பெற்றோர் இறந்துவிட்டால், பெற்றோரில் தந்தையின் வாரிசுகளுக்கு, அந்தப் பெண்ணின் சொத்து சென்று சேரும். இதன்படி பார்த்தால், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகளான தீபக் ஜெயக்குமார், தீபா ஆகியோருக்குச் சென்று சேரும்.
மேலேசொன்ன இறங்குரிமை என்பது, ஜெயலலலிதா தன்னுடைய சொத்துக்கள் குறித்து, உயிலோ அல்லது வேறு ஆவணங்கள் எதுவும் எழுதி வைக்காமல் இருக்கும் நிலையில்தான் நடக்கும்.
ஜெயலலிதா யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால், தீபா, தீபக் இருவரும் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியாது. ஜெயலலிதா தன்னுடைய சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளாரா? இல்லையா? என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
ஜெயலலிதாவின் சொத்துக்களை வேறு யாராவது விற்க முயன்றால் அப்போது ஜெயலலிதாவின் உயில் பற்றி தெரியவரும். இப்போதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.