காதலை கைவிட மறுத்த சிறுவனை கொடூரமாக கொலை செய்த சிறுவர்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

டெல்லியில் காதலை கைவிட மறுத்த 16 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அருகிலுள்ள கஞ்சவாலா பகுதியை சேர்ந்த ஜடின் என்ற 16 வயது சிறுவன், அப்பகுதியை சேர்ந்த மற்றொரு சிறுவனான குலாமின் தங்கையை காதலித்து வந்துள்ளான்.

advertisement

தனது தங்கையை காதலிப்பதை நிறுத்திவிடுமாறு குலாம் பலமுறை ஐடினிடம் கூறியும் அவன் கேட்கவில்லை.

இதனால், தனது நண்பர்கள் மூன்று பேருடன் சென்ற, என் தங்கச்சியை லவ் பண்ணாதேன்னு சொன்னா, கேட்க மாட்டியா?’ என்று கேட்டுவிட்டு ஜடினின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளான்.

ரத்தம் சொட்ட சொட்ட துடிதுடித்து அங்கேயே இறந்தார் ஜடின்.

பின்னர் இந்த சம்பவத்தை ஒரு நண்பரிடம் சொல்லி, தப்பிக்க என்ன செய்யலாம் என்று கேட்டனர். அந்த சிறுவன், காவல் உதவி ஆய்வாளரின் மகன் என்பதால், நான் இதனை எனது தந்தையிடம் தெரிவிக்கிறேன், என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு தனது அப்பாவிடம் இந்த சம்பவத்தை கூறியுள்ளான்.

இதனைத்தொடர்ந்து, அந்த காவல் ஆய்வாளர், பாழடைந்த பங்களாவுக்கு சென்று, அங்கு ரத்த வெள்ளத்தில் பலியாகி இருந்த ஜடினின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தற்போது, அந்த 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்த பிஞ்சு வயதிலேயே காதல், இதற்கு கொலை செய்யும் அளவுக்கு வெறித்தனமாக மாறிய சிறுவர்களின் செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments