நடிகர் சத்தியராஜின் மகளுக்கு மிரட்டல்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

உணவு ஆலோசக மருத்துவராக பணியாற்றி வரும் நடிகர் சத்தியராஜின் மகள் திவ்யாவுக்கு அமெரிக்க கம்பெனியை சேர்ந்த இருவர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது பற்றி திவ்யா கூறியதாவது: சமீபத்தில் அமெரிக்க கம்பெனியை சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் என்னை சந்தித்தனர். தங்களது கம்பெனி தயாரிக்கும் உடல் எடை கூட்டும், குறைக்கும் விட்டமின் மருந்துகளை பரிந்துரை செய்யும்படி என்னிடம் கேட்டனர்.

அந்த மருந்துகளில் உள்ள கெமிக்கல்களை ஆராய்ந்து பார்த்ததில் அவை ஓவர் டோஸ் அளவில் இருந்தது.

அதை உட்கொண்டால் கண்பார்வை பறிபோவதுடன் பல்வேறு உபாதைகள் வரும். அதை என்னிடம் ஆலோசனை கேட்க வரும் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய மறுத்துவிட்டேன். உடனே அவர்கள் லஞ்சம் தர முன்வந்ததுடன் தங்களுக்கு பெரிய அரசியல்வாதிகளை தெரியும் என்று கூறி மிரட்டினர்.

இந்த மருந்தை எப்படி விற்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறிச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் கொடுக்கவிருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments