பத்து ரூபாவினால் 70 ஆயிரத்தை இழந்த நபர்! மர்மநபர்களின் அதிரடி செயல்

Report Print Vethu Vethu in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

10 ரூபாய் பணத்துக்கு ஆசைப்பட்ட தேடிச் சென்ற நபரிடம் 70 ஆயிரம் ரூபாயினை கொள்ளையிட்ட சம்பவம் சென்னையில் பதிவாகியுள்ளது.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ரங்கநாதன் (70). இவர், நேற்று முன்தினம் மந்தைவெளி திருவேங்கடம் சாலையில் உள்ள ஒரு வங்கியில் ரூ.70 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.

தனது காரில் பணத்தை வைத்துவிட்டு புறப்பட முயன்றார். அப்போது, மர்ம நபர் ஒருவர் ரங்கநாதனிடம், ‘நீங்கள் காரில் ஏறும் போது பணம் கீழே விழுந்துவிட்டது’ என்று கூறி உள்ளார். இதைக்கேட்ட ரங்கநாதன் காரில் இருந்து இறங்கினார்.

காரின் அருகே நின்றிருந்த மற்றொருவர் காரில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் காரின் அருகே சிதறிக்கிடந்த 10 ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு ரங்கநாதன் காரில் ஏறியபோது, இருக்கையில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் ரங்கநாதன் புகார் அளித்தார். பொலிஸார் வழக்கு பதிவு செய்து வங்கியின் வெளியே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments