எதிர்கட்சிகள் எதிர்ப்பை மீறி ஆரம்பமானது ஜி.எஸ்.டி. அறிமுக கூட்டம்

Report Print Kalam Kalam in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

வியாபாரிகள், பொதுமக்கள் பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஒற்றை வரி முறையான ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, நள்ளிரவு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, இன்று முதல், நாடு முழுதும் இது நடைமுறைக்கு வருகிறது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பிரமாண்ட விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் வாழ்த்துடன் இந்த வரி முறையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோரின் எதிர்ப்புகளை மீறி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த புதிய வரலாற்றை படைத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments