மேற்கு வங்காளத்திற்கு செல்லும் பெண்கள் கற்புடன் திரும்ப முடியாதா?

Report Print Peterson Peterson in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

மேற்கு வங்காளத்திற்கு செல்லும் பெண்கள் கற்புடன் திரும்ப முடியாது என பாஜக பெண் எம்.பி ஒருவர் விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் நடிகையும் பாஜக எம்.பியுமான ரூபா கங்கூலி கடந்த வெள்ளிக்கிழமை அன்று மேற்கு வங்காள மாநில ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

‘இந்தியாவில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்களது மனைவி, மகள், மருமகள் என யாரையாவது மேற்கு வங்காளத்திற்கு அனுப்பி வையுங்கள்.

இவர்கள் அங்கு இருக்கும் 15 நாட்களுக்குள் நிச்சயமாக கற்பழிக்கப்படுவார்கள்’ என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ரூபா கங்கூலியின் இந்த விமர்சனத்தை தொடர்ந்து மேற்கு வங்காள ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் நேற்று பொலிசாரிடம் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

’மேற்கு வங்காள முதல்வரான மம்தா பனார்ஜியின் ஆட்சியை அவமதிக்கும் வகையில் ரூபா கங்கூலி பேசியுள்ளால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக’ திரிணாமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுக் குறித்து நேற்று மீண்டும் பத்திரிகையாளர்களை ரூபா கங்கூலி சந்தித்தபோது, ‘நான் தவறாக எதுவும் பேசவில்லை. உண்மையை கூறவேண்டும் என்றால் 15 நாட்கள் மிக அதிகம். மேற்கு வங்காளத்தில் அந்தளவிற்கு கற்பழிப்பு குற்றங்கள் நிகழ்கிறது’ என விளக்கம் அளித்துள்ளார்.

ரூபா கங்கூலியின் கருத்தை பாஜக தலைமையும் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments