வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா: என்ன காரணம்?

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சசிகலா தரப்பிலிருந்து 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு தனி சமையலறை உட்பட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா புகார் கூறியுள்ளார்.

இதற்கிடையில், சிறையில் கைதிகள் டி.ஐ.ஜி. ரூபாவுக்கு ஆதரவாகவும் டிஜிபி சத்யநாராயண ராவுக்கு ஆதரவாகவும் இரு பிரிவாக பிரிந்துள்ளனர்.

இது கைதிகளுக்குள் மோதலை உருவாக்கும் என்பதால் 32 கைதிகள் வெவ்வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனால் சசிகலாவுக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அவரையும் வேறு சிறைக்கு மாற்ற கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சசிகலா தும்கூர் சிறைக்கு மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments