பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா, அமெரிக்க நிறுவனம் தன்னை மிரட்டுகிறது என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஊட்டச்சத்து நிபுணராக இருக்கும் திவ்யா, அமெரிக்க மருந்து நிறுவனத்தை சேர்ந்த சிலர் தன்னை அணுகி நோயாளிகளுக்கு தங்கள் மருந்தை சிபாரிசு செய்யும்படி மிரட்டியதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, மருந்து நிறுவனங்களில் பல மோசமான காரியங்கள் நடக்கின்றன.
அமெரிக்க நிறுவன அதிகாரிகள் என்னை சந்தித்து தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யும் படி கோரினார்கள். அந்த மருந்து உடலுக்கு தீங்கு என ஆய்வில் தெரியவந்தது.
எனவே நான் அந்த மருந்துகளை சிபாரிசு செய்ய முடியாது என்று மறுத்து விட்டேன். அவர்கள் எனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனர். அதையும் வாங்கவில்லை.
இதனையடுத்து, அவர்கள் என்னிடம் தங்களுடைய அரசியல் செல்வாக்கை சொல்லி மிரட்டி விட்டுச்சென்றார்கள். இது ஒரு முக்கிய பிரச்சினை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய மருந்து மோசடிகளை தடுக்க வேண்டும் என திவ்யா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.