75 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த ரயில்வே ஊழியர்

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

ரயில் நிலையத்தில் நின்றிருந்த 75 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த ரயில்வே ஊழியரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

உத்தரபிரதேச மாநிலத்தின் மொரதாபாத்தில் உள்ள ரயில் நிலையத்தில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் மூதாட்டியை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிப்புக்குள்ளான மூதாட்டியால் அதிர்ச்சி காரணமாக பேச முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார் குற்றவாளியான ரயில்வே ஊழியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments