இந்திய ஜனாதிபதி தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவடைந்தது

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

இந்தியாவின் 14 வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை தொடங்கியது.

நாடு முழுவதும் உள்ள எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஆளும் பா.ஜ., சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமாரும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் 776 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் பகல் 12 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் 232 தமிழக எம்.எல்.ஏக்களும் தங்களின் வாக்குகளை பதிவு செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கேரள எம்.எல்.ஏ அப்துல்லா ஆகியோர் சிறப்பு அனுமதி பெற்று வாக்களித்துள்ளனர்.

இதனால் மொத்தம் 234 வாக்குகள் தமிழகத்தில் பதிவாகி உள்ளது. தமிழக எம்.எல்.ஏக்களில் கருணாநிதி வாக்களிக்கவில்லை.

இன்று பதிவாகும் வாக்குகள் ஜூலை 20 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜூலை 25 ம் தேதி இந்தியாவின் புதிய ஜனாதிபதி பதவியேற்பார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments