அமெரிக்க விமானத்தால் நின்ற நிச்சயதார்த்தம்: இளம்பெண் எடுத்த முடிவு

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

விமானத்தில் ஏற அனுமதி மறுத்ததால் நிச்சயதார்த்தம் ரத்தான சென்னை பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அமெரிக்க விமான நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் சென்னையை சேர்ந்த பிரசன்னா என்பவரின் மகள் இந்திரா பிரியாவுக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது.

advertisement

இதற்காக அமெரிக்காவில் இருந்து சென்னை வருவதற்காக டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் பிப்ரவரி 5 ஆம் திகதி பயணமாகும் வகையில் அவர் முன்பதிவு செய்திருந்தார்.

ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை எதுவும் இல்லை என கூறி கடைசி நேரத்தில் விமானத்தில் ஏற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இருப்பினும் விமான நிலைய அதிகாரிகளிடம் தமது நிலையை எடுத்துக் கூறி, தம்மை அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் விமானத்தில் வேறு இருக்கை இல்லை எனவும் மறுத்துள்ளனர்.

இதனால் வெறுவழியின்றி பிப்ரவரி 21-ஆம் திகதி லுஃப்தான்ஸா விமானத்தில் முன்பதிவு செய்து சென்னை வந்து சேர்ந்துள்ளார். இதனால் பிரியாவின் திருமண நிச்சயதார்த்தம் ரத்தானது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பிரியாவுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி

டெல்டா விமான நிறுவனத்துக்கும், பயண டிக்கெட்டை பதிவு செய்து கொடுத்த ஆன்லைன் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments