நடிகர் கமலுக்கு ஆதரவாக களமிறங்கிய ஓபிஎஸ்

Report Print Basu in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊழல் அதிகரித்து வருவதாக நடிகர் கமல் கருத்து தெரிவித்த நாள் முதல் அதிமுக அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இன்று பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் கமலுக்கு தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்த பிறகு கருத்து கூறட்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள பதிவில், நடிகர் கமலுக்கு ஜனநாயக முறையில் அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும். அவர்களின் பதவி மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி அவரை அச்சுறுத்தக்கூடாது என கூறியுள்ளார்.

2015 சென்னை வெள்ளத்தின் போது அரசின் மீட்பு பணி குறித்து கமல் விமர்சித்ததிற்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது நினைவுக் கூறத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments