நேர்மைக்கு கிடைத்த பரிசு: சசிகலா விவகாரத்தில் புயலை கிளப்பிய அதிகாரிக்கு சிக்கல்

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

கர்நாடக மாநிலம் பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் நடைபெறும் முறைகேடுகளை வெளிப்படுத்திய சிறைத்துறை டிஐஜி ரூபா பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும், சிறைக்குள் சசிகலாவுக்கு மாடுலர் கிச்சன் உள்ளிட்ட பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை டிஜிபிக்கு அறிக்கையனுப்பினார் ரூபா.

இந்த தகவல் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது. ரூபாவும் பின்னர் நிருபர்களை சந்தித்து அறிக்கையிலுள்ள அம்சங்கள் உண்மைதான் என பேட்டியளித்தார்.

இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற அதிகாரி தலைமையில் உயர்மட்ட குழு விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ரூபா டிராபிக் மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பணி விதிமுறைகளை மீறி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்ததற்காக கர்நாடக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல சத்யநாராயணராவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது நேர்மையான அதிகாரிகளுக்கு ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளால் வழங்கப்படும் பரிசு என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

16 வருடங்களாக காவல் துறையில் இருக்கும் ரூபா இதுவரை 30 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறார். இன்று 31-வது முறையாக மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments