மது போதையில் பள்ளி சீருடையுடன் மயங்கி கிடந்த மாணவர்கள்

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

அரசு பள்ளிக்கூட மாணவர்கள் மது அருந்திவிட்டு போதையில் பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. மதுகடைகளை மூட வேண்டும் என பல்வேறு போராட்டங்களும் அடிக்கடி நடைப்பெற்று வருகிறது.

advertisement

மதுவுக்கு பள்ளிக்கூட மாணவர்களும் அடிமையாக தொடங்கியுள்ளார்கள். இதற்கேற்றார் போல மணப்பாறையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

மணப்பாறை அருகில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கும் இரண்டு மாணவர்கள் வகுப்பை கட் அடித்து விட்டு மது அருந்தியுள்ளனர்.

பின்னர், முழு போதையுடன் பள்ளிக்கூட சீருடை அணிந்திருந்த நிலையிலேயே பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளனர்.

இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் ஆட்டோவில் ஏற்றி கொண்டு போய் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments