கர்நாடகாவில் பெண்ணிடம் தவறாக நடந்த நபருக்கு பெண்ணின் குடும்பத்தினர் தக்க தண்டனை கொடுத்துள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜயபுர நகரத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. அந்நகரத்தை சேர்ந்த நபர் ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார்.
இதையறிந்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடித்து அரை மொட்டையடிதத்து, பாவாடை மற்றும் செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.
பின்னர், மோளம் அடித்து ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
Karnataka: Man allegedly misbehaves with woman, paraded in skirt with half-shaved head & garland of slippers in Vijayapura by woman's family pic.twitter.com/27dBs6MqcT
— ANI (@ANI_news) July 17, 2017