பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வசதிகள்: வெளியான புகைப்படம்

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையென உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அடைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு அங்கு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டை எழுப்பிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா, பெங்களூர் நகர காவல் துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் பொலிஸ் அதிகாரி ரூபா எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என உறுதிப்படுத்தும் வகையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்த அறையின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் அறையில் யோகா செய்வதற்கான சிறப்பு மெத்தை, உயர் ரக சமையல் பாத்திரங்கள் என அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments