நடத்தையில் சந்தேகம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்

Report Print Raju Raju in இந்தியா
371Shares
371Shares
lankasrimarket.com

மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை வெட்டி கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (50) இவர் மனைவி சரஸ்வதி (45).

இவர்களுக்கு மகேந்திரன் (28) என்ற மகனும், சத்யா (25) என்ற மகளும் உள்ளனர். சத்யாவுக்கு திருமணமாகி அடுத்த ஏரியாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சந்திரன் மற்றும் சரஸ்வதி இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் 7 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள்.

நேற்று முன்தினம் சரஸ்வதி தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு இரவு தாமதமாக வந்துள்ளார்.

ஏற்கனவே மனைவி மீது சந்தேகத்தில் இருந்த சந்திரன் தாமதம் குறித்த காரணத்தை கேட்டு சண்டை போட்டுள்ளார்.

இது ஆத்திரமாக மாற வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து சந்திரன் தப்பி சென்று விட்டார்.

ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்த அறிந்த பொலிசார் சரஸ்வதியின் சடலத்தை கைப்பற்றியதோடு, தப்பி சென்ற சந்திரனை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்